Also Watch
Read this
By: Manigandan Raja

நான் பியானோவை பார்ப்பதற்கே 27 வயது ஆனது
உலகில் உள்ள பெரிய இசைமேதைகள் எல்லாம் பியானோவைப் பார்த்தே வளர்ந்தவர்கள் ஆனால் தான் பியானோவை பார்ப்பதற்கே 27 வயது ஆனதாக இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தேனியில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் "மஞ்சணத்தி" படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
ஓ.டி.டி.யில் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம்
சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வரும் 11ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் உலகம் முழுவதும் 260 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
சேயோனில் இணைந்த சீமான் வீடியோ வெளியிட்டு அறிவித்த தயாரிப்பு நிறுவனம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் அறிவித்துள்ளது.

வேட்டி சட்டையுடன் கிராமத்து பெரியவர் கெட்டப்பில் உள்ள சீமான், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிக்க உள்ளாரா என யூகங்கள் இணையத்தில் கொடி கட்டி பறக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved