news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நெட்பிளிக்ஸ் தளத்தில் 'கர' திரைப்படம் புதிய சாதனை
tv

Also Watch

tv

Read this

நெட்பிளிக்ஸ் தளத்தில் 'கர' திரைப்படம் புதிய சாதனை

கர

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கர

ஒரு வாரத்தில் 38 லட்சம் பார்வையாளர்களை பெற்ற 'கர' :

போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான 'கர' திரைப் படத்துக்கு திரையரங்குகளில் போதிய வரவேற்பு கிடைக்காத போதிலும் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான 'கர' திரைப்படத்தை ஒரு வாரத்தில் மட்டும் 38 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

Ice Age: Boiling Point படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு :

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள Ice Age திரைப்படத்தின் அடுத்த பாகம், 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக இந்தாண்டு டிசம்பர் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் அவென்சர்ஸ் டூம்ஸ் டே (( Avengers: Doomsday )) திரைப்படம் வெளியாக உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

திரைத் துறைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்த காஜல் :

திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் விதமாக காஜல் அகர்வால் நடித்துள்ள தி இந்தியன் ஸ்டோரி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகரான ஸ்ரேயாஸ் தல்படே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியாகிறது.

நாக சைதன்யா நடிக்கும் தூதா 2 வெப் சீரிஸ் :

நாக சைதன்யா நடிக்கும் தூதா 2 வெப் சீரிஸின் படப்பிடிப்புகள் தொடங்கின. இதில் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில், பார்வதி, பவானி ஷங்கர், நாக சைதன்யா மற்றும் படக்குழுவினர் சிலர் கலந்துகொண்டனர்.

ஜெயிலர்-2 படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்-2 திரைப்படம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இசைக் கோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Related Link
சிக்மா திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

சிக்மா திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau