Also Watch
Read this
By: Manigandan Raja

முதல் பாடலை வெளியிட்ட துல்கர் சல்மான் :
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை துல்கர் சல்மான் வெளியிட்டார். சந்தீப் கிஷன் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 31 வெளியாக உள்ள நிலையில் முதல் பாடல் வெளியாகியுள்ளது. எஸ்.தமன் இசையமைப்பில் ரிலீஸான இந்த ராப் சாங் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கார் ரேஸிங்கில் களமிறங்கிய நடிகர் அஜித்குமார் :

தாயின் இறப்புக்கு பின் நடிகர் அஜித் குமார் கனத்த இதயத்துடன் கார் ரேஸிங்கில் களமிறங்கினார். பிரான்சில் நடைபெற இருக்கும் கார் ரேசிங்கிற்கு அஜித் குமார் தயாராகி வருவதாக அவரது அதிகாரபூர்வமான எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் ‘ஒருநொடி’ பாடல் வெளியீடு :

‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் ‘ஒருநொடி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். “ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 175 கோடி வசூல் செய்த கருப்பு :

சூரியா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 175 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூரியா படங்களில் திரையரங்குகள் மூலம் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ள நிலையில், விரைவில் 500 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் வெளியான வழக்கு :
'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகளைச் சட்ட விரோதமாக இணையத்தில் பரப்பியதாக மேலும் 6 பேரைத் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருட்டுத்தனமாகத் திரைப்படத்தைப் பகிர்ந்தவர்களிடமிருந்து போன்கள் மற்றும் கணினிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.