news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews இயக்குநராக அவதாரம் எடுக்கும் ராகவா லாரன்ஸ் மகள்
tv

Also Watch

tv

Read this

இயக்குநராக அவதாரம் எடுக்கும் ராகவா லாரன்ஸ் மகள்

ராகவா லாரன்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகவா லாரன்ஸ் மகள்

முதல் படத்தை ராகவா லாரன்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸின் மகள் ராகவி இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைத்துறையில் நடிகராகவும், இயக்குநராகவும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ராகவா லாரன்ஸ், தற்போது தனது குடும்ப உறுப்பினர்களை சினிமாவுக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே தனது தம்பி எல்வின் லாரன்ஸை நாயகனாக அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது தனது மகள் ராகவியை இயக்குநராகக் களம் இறக்கியுள்ளார். மேலும், அவரது முதல் படத்தை ராகவா லாரன்ஸே தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகிவரும் "டாக்ஸிக்" திரைப்படம் :

நடிகர் யாஷ் ஷுக்கு திருப்தி இல்லாததால் "டாக்ஸிக்" திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. கீதா மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ்ஷுடன், ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த மார்ச்சில் படம் வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 8-ம் தேதி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

கடினமான பயணத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிட்டார் : 

நடிகர் சிம்புவின் "ஜர்னி ஆஃப் அட்மேன் டைம்லைன் 2021" என்ற பயணத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு 2020-க்கு முன்பாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமலும்.

அதிக எடையுடனும் இருந்த கடினமான காலங்களை கடந்து 2021-ல் கம்பேக் அளித்தார். இந்த இடைப்பட பயணத்தை முன்னிட்டு, இதுவரை 2020-ல் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து 4 எபிசோடுகள் அடங்கிய வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார்.

இந்த சூழலில், தற்போது 2021-ல் எடுத்த வீடியோக்களின் தொகுப்பையும் டிரெய்லராக வெளியிட்டுள்ளார்.

20 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது : 

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய "முட்ட கலக்கி" பாடல் 20 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 2026-ல் வெளியான பாடல்களில் முதல் பாடலாக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

நடிகர் கென் இயக்கி, நடித்துள்ள "யூத்" திரைப்படம் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற "முட்ட கலக்கி" பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.

இந்த பாடலை கென் எழுதி, பாடியிருந்தார். இந்தியாவில் முதல்முறையாக ஒரு பாடல் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" திரைப்படம் :

நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜியென் கிருஷ்ணகுமார் இயக்க, முரளி கோபி கதை எழுதியுள்ளார்.

மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு "காந்தாரா" படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். நிகிலா விமல், ரெஜினா, சுனில், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Link
விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம்

விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கையிருப்பில் உள்ள ரூ.1.14 லட்சம் கோடி தங்கம் விற்பனை?

0
1 hr 4 mins agoshare
தங்கம் விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved