Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பு
நடிகர் விஷால் இயக்கி, நடித்துள்ள "மகுடம்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், விவேக் வரிகளில் உருவாகியுள்ள "காத்தாக வாழப்போறேன்..." பாடலை ஹரிஹரன், மேக்னா சுமேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் நாளை வெளியாகிறது.
சூர்யா நடிப்பில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறது.இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் குடும்பம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved