Also Watch
Read this
By: Manigandan Raja

படத்துக்கு "மக்கள் காவலன்" என பெயரிடப்பட்டுள்ளது
நடிகர் மணிகண்டன் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு "மக்கள் காவலன்" என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், மணிகண்டன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து குறிப்பிடவில்லை. இந்த சூழலில், நீலம் புரொடெக்ஷன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு சின்னம், ஒரு மனிதன், அதிகாரத்துக்கு எதிரான ஒரு போராட்டம்” என குறிப்பிட்டுள்ளது.
நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் "ராம் இன் லீலா"
நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் "ராம் இன் லீலா" திரைப்படத்தின் 2-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அங்கித் மேனனின் இசையில், உமா தேவியின் வரிகளில் உருவாகியுள்ள "செப்பு செல..." பாடலை வி.எம்.மகாலிங்கம் பாடியுள்ளார்.

இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பிரம்மாண்டமான திருமண விழாவை மையமாகக் கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் ரியோ ராஜ் மற்றும் அறிமுக நாயகி வர்த்திகா ஆகியோரின் நடன அசைவுகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved