news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

திருத்துவபுரம், கன்னியாகுமரி

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விபத்து

பூதப்பாண்டி நல்லபத்திதெருவை சேர்ந்தவர் செல்லப்பன் இவரது மகன் ஏசுதாஸ் என்பவர், காரில் மனைவி சங்கீதாவுடன் நேற்று மதியம் துவரம்காட்டில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவர் திருத்துவபுரம் பகுதியில் வைத்து தனக்கு முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கத்திலிருந்து ரோட்டின் வலது பக்கத்திற்கு அதிவேகமாக சென்றுள்ளது.

அப்போது படந்தாலு மூட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பேருந்து ஒன்றுவந்து கொண்டிருந்தது , அப்போது கார் வருவதை பார்த்ததும் அரசு பேருந்தை சாலையின் ஓரத்தில் ஓட்டுநர் அலெக்சாண்டர் நிறுத்தியுள்ளார்.

ஆனால் கார் வேகமாக சென்று பேருந்தின் முன் பகுதியில் பயங்கர சத்தத்துடன் மோதியுள்ளது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அரசு பேருந்தும் முன் பகுதியில் பலத்த சேதம் அடைந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் அரசு பேருந்தில் இருந்த இராமவர்மன் சிறையைச் சேர்ந்த விஜி என்பவரது மனைவி விஜிலா (43 ) ,மீனச்சல் பகுதியைச் சேர்ந்த வில்சன் மனைவி லீலா (54) ,பாகோடு பகுதியைச் சேர்ந்த செல்லசாமி மகன் சுனில் குமார் (34 ) ,வள்ளவிளையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய கிங்ஸின்( 17 ),ததேயுபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பமீலா (43 ) ,ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் ஒரே அழுகுரலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் பேருந்தில் இருந்த மக்கள் மற்றும் அக் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவசர அவசரமாக பேருந்து மற்றும் காரில் இருந்தவர்களை வாகனங்களில் ஏற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுனர் அலெக்சாண்டர் கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
சாலையில் சென்று கொண்டிருந்த இ- பைக்கில் திடீர் தீவிபத்து

சாலையில் சென்று கொண்டிருந்த இ- பைக்கில் திடீர் தீவிபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
4 hrs 35 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau