news-tamil-logo

3/15/2026, 8:34:51 AM

news-tamil-logo
more
Home districtnews எல்லாம் பொய் நம்ப வேண்டாம்...
tv

Also Watch

tv

Read this

எல்லாம் பொய் நம்ப வேண்டாம்...

கிருஷ்ணகிரி

Posted on: Mar 13, 2026 02:09 PM

18

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ksg 3

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவு சார் வழித்தடம் குறித்து தவறான வதந்தி பரப்பப்படுகிறது - பொது மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அறிவு சார் வழித்தடம் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என்று அரசு அறிவித்துள்ள அறிவு சார் வழித்தடம் குறித்து சில தவறான வதந்திகள் பரப்பப்படுகிறது. சென்னையில் ராஜீவ் காந்தி சாலை இருப்பது போல் கிருஷ்ணகிரியில் ஒரு அறிவு சார் வழித்தடம் உருவாக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூருக்கு இணையாக ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக அறிவு சார் வழித்தடம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர்
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது தவிர எந்த பணியும் துவங்கப்படவில்லை. அதற்குள் சிலர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் எடுக்கப்படும் என்று பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். குறிப்பாக கெலவரப்பள்ளி அணையின் பாசன பகுதியில் இந்த திட்டம் வரப்போகிறது என்றும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.

நமது அரசு நிச்சயம் செயல்படுத்தாது
இது குறித்து மாவட்டத்தினுடைய விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முதல்வரை சந்தித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள். அப்பொழுது முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளார் பொதுமக்கள் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் நமது அரசு செயல்படுத்தாது என்று உறுதிமொழியை வழங்கி உள்ளார்.

மீண்டும் உறுதியோடு சொல்கிறேன்
மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் மாவட்டத்தினுடைய விவசாயிகளையும் பொது மக்களையும் பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் நமது அரசு செயல்படுத்தாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார்.

Related Link
கொடுக்க முடியாது, ஆகிறத பாத்துகோங்க...

கொடுக்க முடியாது, ஆகிறத பாத்துகோங்க...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 41 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved