news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காரில் கடத்திய ரூ.8,37,800 கள்ள நோட்டுகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

காரில் கடத்திய ரூ.8,37,800 கள்ள நோட்டுகள் பறிமுதல்

திருவெறும்பூர், திருச்சி

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்றிரவு வெளிமாநில பதிவெண் கொண்ட காரில் பெட்ரோல் போடப்பட்டு அதற்கு செலுத்திய தொகையில் கள்ள
நோட்டு இருப்பதை அறிந்த பெட்ரோல் பங்க் ஊழியர் துவாக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து துவாக்குடி போலீசார் வெளி மாநில பதிவெண் கொண்ட பின் தொடர்ந்து வந்தனர். மேலும் மஞ்சத்திடல் செக் போஸ்ட்டில் வாகனத்தை மறித்து சோதனையிட அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மஞ்ச திடல் செக் போஸ்டில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்த அதிவேகத்தில் வந்த வட மாநில பதிவென் கொண்ட கிவிட் காரை மறித்தனர். மேலும் வாகனத்தை சோதனை இட்டபோது இரண்டு பைகளில் 200 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து 200 ரூபாய் கள்ள நோட்டு 41 கட்டுகள், 89 நோட்டுகள் உட்பட ரூ.8,37,800 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண ராம் (34) ஆகிய இருவரையும் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் மதுரை புதுக்கோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகளை மாற்றி விட்டு திருச்சி வழியாக செல்லும் போது பிடிபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் இதில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் எவ்வளவு பணம் கள்ள நோட்டுகள் உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :  அதிகாலையிலேயே கள்ள சந்தையில் மது விற்பனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
3 hrs 23 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved