பிரபல இசையமைப்பாளர் சாம் C.S மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார். விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் CS. இவர் தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக ரூபாய் 25 லட்சம் பெற்றதாகவும், இசை அமைத்தும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் சமீர் அலிகான் புகார் அளித்துள்ளார்.