Also Watch
Read this
By: Manigandan Raja

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் கிராமத்தை சேர்ந்த சிவா -பிரியா தம்பதியினர் மகன் முகில் வேந்தன்,(2) உடல்நலக் குறைபாடு காரணமாக உணவை நேரடியாக உட்கொள்ள முடியாமல், டியூப் மூலம் உணவு அருந்தி வருகிறார் மிகவும் சிரமப்பட்டு வந்த சிறுவனின் சிகிச்சைக்காக நிதியுதவி கோரி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது
இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த தகவல் தமிழக வெற்றிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடல்நிலையைப் பார்வையிட்டார்.
அப்போது சிறுவனின் மருத்துவச் செலவிற்காக முதற்கட்டமாக கட்சி சார்பாக ரூ.50,000 நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர்
மாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதன் ராஜா, “ஊடகங்கள் மூலம் இந்த விவரம் எங்கள் கவனத்திற்கு வந்தது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக் கழகம் மேற்கொள்ளும்.
மக்களுக்கான சேவையே எங்கள் இயக்கத்தின் நோக்கம். சிறுவனின் முழுமையான மருத்துவச் செலவுகளையும் ஏற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என தெரிவித்தார்.
மேலும், மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவதே தமிழக வெற்றிக் கழகம் என கூறினார்.