Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் இயங்கிய கல்குவாரிகள் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் மதுரை அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் பல மாதங்களாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரியில் பணியாற்றும் ஊழியர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் குவாரியில் வெட்டிய கற்களை ஏற்றி செல்ல லாரி உரிமையாளர்களை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஏதேனும் பிரச்சனை என்றால் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என லாரி உரிமையாளர்களிடம் பேசியதால், லாரி உரிமையாளர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் லாரிகளை இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அனுமதியில்லாமல் கற்களை ஏற்றி சென்றதாக லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் குவாரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதையறிந்த லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று அதிரடியாக குவாரிக்கு சென்று மேலாளரை பார்க்க சென்ற போது முறையாக பதிலளிக்காமல் லாரி உரிமையாளரிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் அனுமதி சீட்டு வழங்காமல் எங்களை அனுப்பி சிக்கலில் மாட்டிவிட்டதாக குவாரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் குவாரிக்கு சென்று பார்த்த போது உரிய அனுமதி சீட்டு இல்லாமல் குவாரி இயங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி தினமும் அதிக லாரிகளில் கற்களை எடுத்து சென்று விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் குவாரியில் பட்ட பகலிலேயே வெடி வைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர், இதனால் வெடி வெடிப்பதால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.
சுற்றுப்புற கிராம மக்கள் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். குவாரியில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக டன் கணக்கில் வெடி வைத்து தகர்த்து வெட்டி எடுத்து அனுமதி சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் வீடியோ எடுக்க சென்ற போது மிரட்டல் விடுத்தும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை படம் பிடித்தது குவாரி கும்பல் குவாரியில் வீடியோ எடுப்பதை பார்த்த நிர்வாகத்தினர் லாரியில் இருந்த கற்களை அங்கிருந்து கொட்டிவிட்டு தப்பியோடியது, மேலும் அலுவலகம்யூட்டர் மற்றும் ஆவணங்களை பீரோவில் மறைத்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.
அனுமதியில்லாமல் கல்குவாரி இயங்கி வருவதாகவும், அனுமதி சீட்டு இல்லாமலும், விவசாய நிலங்களில் எடுக்கும் மணல் அனுமதி சீட்டினை இதில் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் குவாரிக்கு சென்று ஆய்வு செய்து ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved