Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழாஈரால் ஊராட்சிக்குட்பட்ட நற்கலைக்கோட்டை கிராமத்தில் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கவில்லை என்றும், ஊராட்சியில் உள்ள மற்ற ஊர்களுக்கு பணிகள் தருவதாகவும்.
ஆனால் நிதி இல்லை என்று கூறி நற்கலைக்கோட்டை கிராமத்தில் மக்களுக்கு பணிகள் தர மறுப்பதாகவும், எனவே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்க வலியுறுத்தி கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் அக்கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved