news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மின்வெட்டு ஏற்படுவதைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

மின்வெட்டு ஏற்படுவதைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்

திருத்தணி, திருவள்ளூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மூன்றாவது நாட்களாக மின்வெட்டு

மக்கள் சாலை மறியல் : 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின் கம்பங்கள் உடைந்ததால் கடும் மின் தடை ஏற்பட்டது.

பெரும்பாலான பகுதிகளில் 20 மணி நேர மின் தடைக்கு பிறகு மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து மின் விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட குமாரகுப்பம், பாபிரெட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் உடைந்த மின்கம்பங்கள் அகற்றி மின் சேவை வழங்குவதில் மின் ஊழியர்கள் தொடர்ந்து கால தாமதப்படுத்தி வருவதால்.

மூன்றாவது நாளாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து மின்சாரமின்றி குழந்தைகள், முதியோர் உள்பட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பாபிரெட்டிப்பள்ளி பகுதி பொதுமக்கள் பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் முட்செடிகள் சாலையில் அடைத்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இளநிலை பொறியாளர் ஷர்மிளா, சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் சாலை மறியலில் ஈடுபட்ட
பொதுமக்களுடன் அமர்ந்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் மறியல் போராட்டம் நீண்ட நேரம் நேரம் நீடித்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல் தெக்களூரில் மூன்று நாட்களாக மின் விநியோகம் முழுமையாக தடைப்பட்டுள்ளதால், ஆவேசமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்திருந்தனர்.

அப்போது மின்வாரிய அதிகாரி ஷர்மிளாவை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு நாங்கள் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடி தண்ணீர் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம் என்று அவரிடம் கடும் ஆக்குவாதத்தில் ஈடுபட்டு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

உடனடியாக மின் ஊழியர்களை வரவழைத்து மின் கம்பங்களை அகற்றி மின்சார வழங்கப்படும் தெரிவித்ததன் பெயரில் மறியலில் இருந்து கலைந்து சென்றனர்.

Related Link
நிலம் தர மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

நிலம் தர மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

1
4 hrs 0 min agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved