Also Watch
Read this
By: Manigandan Raja

லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் :
நாமக்கல் பகுதியை சேர்ந்த லாரி தொழில் அதிபர் சுந்தர்ராஜ் என்பவர் பூர்விக சொத்தினை தம்பிக்கு தான செண்டில்மெண்ட் பத்திரபதிவு செய்ய நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள இணை சார்பதிவாளர் எண் - 2 ல் அனுகியுள்ளார்.
அப்போது தான் செண்டில்மெண்ட் பத்திரபதிவு செய்ய சார்பதிவாளர் மனோகரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு சுந்தரராஜ் ரூ.30 ஆயிரம் தருவதாக கூறியதையடுத்து அந்த
லஞ்ச பணத்தை புரோக்கர் சதீஸிடம் வழங்க வேண்டும் என சார்பதிவாளர் மனோகரன் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர்ராஜ் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரொக்கப்பணம் ரூ.30 ஆயிரத்தை சுந்தரராஜ் புரோக்கர் சதீஷ் மூலம் சார்பதிவாளர் மனோகரனிடம் வழங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் மனோகரன், புரோக்கர் சதீஷ் ஆகிய இருவர் மீதும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved