Also Watch
Read this
பேரிடர் மேலாண்மை துறைக்கு முன்னெச்சரிக்கையாக 1000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி விட்டதாக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். மத்திய அரசு எந்த தயக்கமும் காட்டாமல், கேட்ட நிதியை முன்கூட்டியே வழங்கி விட்டதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
ஆயிரம் கோடி கிடைத்தது
இதுதொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது;
தமிழகத்தின் பேரிடர் மேலாண்மை பணிக்கு 1000 கோடி ரூபாய் தேவை என கூறினேன். அதனை முன் எச்சரிக்கையாகவே மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய அரசு எந்த தயக்கமும் காட்டாமல், கேட்ட நிதியை முன்கூட்டியே வழங்கி உள்ளது. முதல்வர், செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். செய்தியாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதை காட்டிலும், செயல் வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.மாரிதாஸ் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என சட்ட ரீதியாக தெரியவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது தனிப்பட்ட விமர்சனமாக இல்லாமல், பொது மக்கள் வளர்ச்சிப் பணிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாடே வளர்ச்சியடையும்.

5 நாளில் முடிக்க வேண்டும்
வருவாய் துறையில், பொது மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை நடத்துகிறோம். ஜாதி சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள உள்ளோம். ரேஷன் கார்டு, முதியோர் உதவித் தொகை, சமூக நலத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை எப்படி எளிதாக கிடைக்கும் வகையில் நிறைவேற்றுவது என ஆய்வு செய்ய உள்ளோம்.
ஆன்-லைன் முறையில் பதிவு செய்யும்போது, சில நேரங்களில் கால தாமதம் ஏற்படுவதாக புகார் உள்ளது. ஆன்-லைன் மூலமாக பதிவு செய்த உடன், அந்தந்த வருவாய் வட்டத்தில் விஏஓ ஆய்வு செய்து அந்தப் பணிகளை 5 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கவில்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பட்டா மாறுதல் நடவடிக்கை
அரசு நிலம் எந்தெந்த இடங்களில் உள்ளது, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளோம். பட்டா மாறுதலில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved