news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சிலர் தூண்டுதலின் பேரில் போராட்டம் என அமைச்சர் நிர்மல்குமார் புகார்
tv

Also Watch

tv

Read this

சிலர் தூண்டுதலின் பேரில் போராட்டம் என அமைச்சர் நிர்மல்குமார் புகார்

வேண்டுமென்றே மின்தடை

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சில இடங்களில் வேண்டுமென்றே மின் தடை ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் புகார் கூறி உள்ளார். மின் வெட்டு சரிசெய்யப்பட்ட பிறகும் கூட மக்களை போராட சிலர் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

வேண்டுமென்றே மின் தடை
இதுதொடர்பாக, மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியதாவது;
சென்னை பெரம்பூரில் இரண்டு தெருக்களில் வேண்டுமென்றே மின் தடை ஏற்படுத்தப்பட்டது. உடனே அது சரிசெய்யப்பட்டது. அப்போது சிலர் தூண்டுதலின் பேரில், பொது மக்களை சாலைகளில் நிறுத்தி பிரச்சினை செய்தனர். ஒரு சில இடங்களில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின் வெட்டையும் சரி செய்கிறோம். இந்த விஷயத்தில் பொது மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு வழியாக அளிக்கப்படும் புகார்கள், மின்னகத்தின் மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது.

கைது நடவடிக்கை
எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளது, அதனை எவ்வளவு நேரத்தில் சரி செய்கிறோம் என்பதை, மின் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம். தவறான நபர்கள் வேண்டுமென்றே ஃப்யூஸ்களை பிடுங்கி, மின் தடை ஏற்படுத்தியது குறித்த புகார்களில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிசிடிவி இருந்ததால் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிசிடிவி இல்லாத இடத்தில் பொது மக்கள் கண்காணிக்க வேண்டும்.

சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை...
அகில இந்திய அளவிலான சிஐஐ கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து பரிமாறப்பட்டது. இந்த துறையில் அரசு எடுக்கப் போகும் கொள்கை முடிவுகள் மற்றும் அரசின் ஒத்துழைப்பு குறித்து விளக்கமளித்தோம்.

Related Link
காங்கிரஸ் கட்சியை விமர்சித்த திருமாவளவன், கண்களை அகல விரித்த ராகுல்

காங்கிரஸ் கட்சியை விமர்சித்த திருமாவளவன், கண்களை அகல விரித்த ராகுல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

7
2 hrs 29 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved