Also Watch
Read this
By: Manigandan Raja

EMI வசதியை அதிகரிக்க கோரிக்கை :
மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பாதிக்காமல் இருக்க, 36 மாத EMI வசதியை அறிமுகம் செய்ய பெரு நிறுவனங்களுக்கு சில்லறை விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளன. அதிகபட்ச EMI வசதியை 24ல் இருந்து 36 மாதங்களுக்கு அதிகரிப்பதால் மாத சந்தா தொகை 2,000 வரை குறையும் என விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய மிளகாய்களை நிராகரித்த சீனா!

இந்திய காய்ந்த மிளகாய்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாகக் கூறி சீனா நிராகரித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 3 நிறுவனங்களின் இறக்குமதி உரிமத்தை சீனா ரத்து செய்துள்ளது. இந்திய மிளகாய் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை சீனா வாங்குவது குறிப்பிடத்தக்கது.
HIV/AIDS மரணங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!
உலகளவில் HIV, AIDS தொடர்பான புதிய பாதிப்புகள், மரணங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இதன்படி, புதிய HIV பாதிப்புகள் அதன் உச்சக்கட்டமான 1995ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 65% சரிந்து மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
அதேபோல், AIDS மரணங்களும் 74% வரை குறைந்ததாகவும், 2025 நிலவரப்படி, 4.09 கோடி பேர் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்ட எலான் மஸ்க் :

உலகில் முதல் முறையாக ஒரு ட்ரில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டவராக எலான் மஸ்க் உருவெடுத்தார். SpaceX நிறுவனம் IPO வெளியிட்டு, அமெரிக்க பங்குச்சந்தையில் களமிறங்கியதை அடுத்து, எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் எப்போது?

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம இறுதி வடிவத்திற்கு| வந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக இருநாடுகள் உடனும் பாகிஸ்தான் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved