Also Watch
Read this
By: Manigandan Raja

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விட்டதால் ரத்து என அறிவிப்பு :
ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், திடீரென அத்தாக்குதலை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும், ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என விரைவில் அறிவிப்பு வெளியிடுவதாகவும் கூறிய அவர், இதன் காரணமாக ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி நிச்சயம் :
தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா கடுமையான பதிலடியைச் சந்திக்கும் என்று ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவத் தலைமை தெரிவித்துள்ளது. ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புக்கு கைப்பற்றப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் , எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்; இல்லையெனில் அவை யாருக்கும் கிடைக்காது என ஈரானின் இராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாக். ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு :
30 பேர் கொல்லப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். 37 பேர் காயமடைந்துள்ளனர். அடிப்படை உரிமைகள் வழங்க கோரி பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் வழியாக 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் :

ரகசிய ராணுவ நடவடிக்கை மூலம், 10 கோடிக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக திறந்த சந்தைக்கு கொண்டு சென்றுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானிடம் ரேடார் இல்லாததால் தங்களை கண்டறிய முடியவில்லை என கூறினார்.
பென்டகன் வளாகத்தின் பல தளங்கள் அவசரமாக மூடப்பட்டன :

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வளாகத்தின் பல தளங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு, ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கட்டடத்தின் உட்புற பாதுகாப்பு அமைப்புகள், காற்றில் நச்சுத்தன்மை அல்லது அசாதாரண மாற்றம் இருப்பதை தானியங்கி முறையில் கண்டறிந்ததால், ஊழியர்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையுமாறு உத்தரவிடப்பட்டது.