news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடை விழாவிற்கு அனுமதியின்றி மண் எடுப்பு
tv

Also Watch

tv

Read this

கொடை விழாவிற்கு அனுமதியின்றி மண் எடுப்பு

தூத்துக்குடி - மேல ஈரால்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள மேல ஈரால் கிராமத்தில் இருக்கும் முனியசாமி கோவிலில் கொடை விழா நடைபெற இருப்பதால் பராமரிப்பு பணிகளுக்காக அங்குள்ள கண்மாயிலிருந்து சரள் மண் எடுத்துள்ளனர். உரிய அனுமதி பெறாமல் கண்மாயில் இருந்து மண் எடுத்ததாக எட்டையாபுரம் போலீசார் மண் அள்ளிய வாகனத்தை பறிமுதல் செய்தது மட்டுமின்றி ஓட்டுநர் பொன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த் கிராம மக்கள் கீழாஈரால் கிராமத்தில் உள்ள தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயிலுக்கு மண் எடுத்தது குற்றமா? பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க வேண்டும் வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நெடுஞ்சாலையில் இரு புறமும் சுமாரா 3 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

Related Link
8 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

8 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau