news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
tv

Also Watch

tv

Read this

‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

பாலன் தி பாய்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாலன் தி பாய்

“மஞ்சுமல் பாய்ஸ்” பட இயக்குநரின் ‘பாலன் தி பாய்’  :

“மஞ்சுமல் பாய்ஸ்” பட இயக்குநரின் ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். இப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

40 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் :

40 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1986 ஆம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ என்ற படத்தில் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தார்.

அதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் ஹிருத்திக் ரோஷன் பிரபலமானார். இந்நிலையில், பல ஆண்டுகளாக ரஜினியுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஹிருத்திக் ரோஷனின் விருப்பம் ஜெயிலர் 2 படத்தில் நிறைவேறி இருக்கிறது.

கராத்தே பாபு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது :

ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள கராத்தே பாபு திரைப்படத்தின் முதல் பாடலான 'ராசாத்தி ராசா' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 'டாடா' திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இந்த படத்தில் நாசர், கே.எஸ். ரவிகுமார், மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அன்பே டயா​னா’ படத்தின் ‘தொடுவானத்தில்’ பாடல் வெளியானது :

பாரி இளவழகன் இயக்​கி, நடித்துள்ள ‘அன்பே டயா​னா’ திரைப்படத்தின் ‘தொடுவானத்தில்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

‘அன்பே டயா​னா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக படக்குழு புரோமோ வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

Related Link
நடிகர் சூரி நடித்துள்ள

நடிகர் சூரி நடித்துள்ள "மண்டாடி" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 59 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau