Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படம் செப். 4-ல் வெளியாகும் என அறிவிப்பு :
நடிகர் சூரி நடிக்கும் "மண்டாடி" திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எல்ரெட் குமார் தயாரிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
நடிகர் விஷால் நடிக்கும் "மகுடம்" திரைப்படம் :
நடிகர் விஷால் நடிக்கும் "மகுடம்" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் ரவி மோகன் நடித்துள்ள "கராத்தே பாபு" திரைப்படம் :

நடிகர் ரவி மோகன் நடித்துள்ள "கராத்தே பாபு" திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. "ராசாதி ராசா" என்னும் முதல் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடகி மீனாட்சி இளையராஜா எழுதி பாடியுள்ள இந்த பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில், நடிகர்கள் நாசர், கே.எஸ்.ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ் ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
"எங்கள் தங்கம்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு :

சமந்தா நடித்துள்ள "எங்கள் தங்கம்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை சமந்தா மற்றும் "ஓ பேபி" படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி கூட்டணியில் தெலுங்கில் உருவாகியுள்ள "மா இன்டி பங்காரம்" படத்தை தமிழில் "எங்கள் தங்கம்" என பெயரிட்டு வெளியிடுகின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, தமிழ் பதிப்பின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும்
19-ம் தேதி ரிலீஸாகிறது.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது திரைப்படம் :

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது திரைப்படத்தின் அறிமுக பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது 111-வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கி வருகிறார்.
இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் அறிமுக பாடலான "கிங் ஆஃப் கேயாஸ்" பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.