news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்
tv

Also Watch

tv

Read this

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

கொல்கத்தா

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மேற்குவங்கம்

தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் :

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பலானது தொடர்பாக காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் என்பதால் உரிய விளக்கம் அளிக்க வலியுறுத்தியுள்ளது.

ஒடிசா அரசு பள்ளி கல்லூரிகளில் இலவச கல்வி :

ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில், மழலையர் கல்வி முதல் முதகலை பட்டப்படிவு வரை இலவச கல்வி வழங்கப்படும் என மாநில முதல்வர் மோகன் சரண் மஜி அறிவித்துள்ளார். இதன் மூலம் கல்வியை இலவசமாக்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை ஒடிசா பெற்றுள்ளது.

கேரளத்தில் வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று :

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று வேகமாகப் பரவுகிறது. வயநாடு மாவட்டத்தில் புதிதாக 7 சிறாா்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறாா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

ஷிகெல்லா தொற்று, அசுத்தமான உணவுகள், நீா் மூலமும், ஏற்கெனவே பாதித்தோரிடம் இருந்தும் பரவக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் :

இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீதான தொடர் தாக்குதல்களைக் கண்டித்து, அமெரிக்க தூதருக்கு, இந்தியா 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 11ம் தேதி இந்தியாவின் MT Jalveer கப்பல் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க தூதரை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகம் கண்டித்தது. சமீப நாட்களில் அமெரிக்கா நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் பலியான 65 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

11 கிலோ கஞ்சாவுடன் கேரளம் மாடல் அழகி கைது :

மும்பை விமான நிலையத்தில் 11 கிலோ கஞ்சாவுடன் கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹர்ஷா சன்னி என்ற மாடல் அழகி தனது உடைமைகளில் 11 கிலோவுக்கும் அதிகமான 'ஹைட்ரோபோனிக்' (hydroponic) வகை கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

Related Link
பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 48 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau