Also Watch
Read this
By: Manigandan Raja

11-வது நிதி ஆயோக் கூட்டம்-28 மாநில முதல்வர்களும் பங்கேற்பு :
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் 28 மாநில முதல்வர்களும் பங்கேற்று முழு வருகையை பதிவு செய்துள்ள அரிய நிகழ்வு நடந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக்கின் வருடாந்திரக் கூட்டத்தைப் பொறுத்தவரை, சமீபத்திய ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பலர் அதைப் புறக்கணிப்பதும் அல்லது அதில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் வழக்கமாக இருந்து வந்தது.
பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளும் பிரதமர் மோடி பயணம் :
பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளின் அழைப்பை ஏற்று, அந்நாடுகளுக்கு நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். டெல்லியில் இருந்து நாளை புறப்படும் பிரதமா் மோடி, முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரான நைஸுக்கு செல்கிறாா்.
போட்டியிடும் முன்பே எம்பி சீட்டை திருடிய பாஜக :

வாக்கு திருட்டு மற்றும் அரசாங்கத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பாஜக- தேர்தல் ஆணைய கூட்டணி, தற்போது ராஜ்யசபா எம்பி பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பே அந்த இடத்தை திருடி விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு விவகாரம் :

மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு விவகாரத்தில் கையெழுத்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியிடம் சிஐடி அதிகாரிகள் சுமார் 6 மணி நேர விசாரணை நடத்தினர்.
திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு விவகாரத்தில் எம்.எல்.ஏக்களின் கையெழுத்தை போலியாக இடம்பெற செய்ததாக அபிஷேக் பானர்ஜி மீது சொந்த கட்சி உறுப்பினர்களே புகாரளித்தனர்.
அகங்காரம் பிடித்த அபிஷேக் - கல்யாண் பானர்ஜி :
அபிஷேக் பானர்ஜி அகங்காரம் பிடித்தவர் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி விமர்சித்திருக்கிறார். கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை பற்றி மனம் திறந்து பேசியிருக்கும் அவர், ஒன்று தன்னை முன்னிறுத்துங்கள் இல்லையென்றால் அபிஷேக்கை முன்னிறுத்துங்கள் என மம்தாவுக்கு வெளிப்படையாக வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.