news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேலை தரப்படாமல் கைவிடப்பட்டதால் தவித்த குடும்பம்
tv

Also Watch

tv

Read this

வேலை தரப்படாமல் கைவிடப்பட்டதால் தவித்த குடும்பம்

வேளாங்கண்ணி, நாகை

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மகாராஷ்டிரா குடும்பத்தினர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு கூலி வேலைக்காக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் 2 பெண்களும் அடங்குவர்.

இந்நிலையில், வேலை வழங்குவதாக கூறி அழைத்து வந்தவர்கள் அவர்களை வேலை சேர்த்து விடாமல் தவிக்கவிட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் நாகப்பட்டினம்
பகுதியில் குழந்தைகளோடு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் சுற்றி திரிந்துள்ளனர்.

அவர்களை பற்றி அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரையும் மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினரின் ஏற்பாட்டில் அவர்களை சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னதாக வருவாய்த்துறையினர் அவர்களுக்கு தேநீர் மற்றும் உணவு வழங்கி தேவையான உதவிகளை செய்தனர். வேலைக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் வட மாநில
தொழிலாளர்களை மீட்டு பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை

ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau