news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கொல்லூர் மூகாம்பிகையை வழிபட்ட முதலமைச்சர் விஜய்
tv

Also Watch

tv

Read this

கொல்லூர் மூகாம்பிகையை வழிபட்ட முதலமைச்சர் விஜய்

வெள்ளி வாள் காணிக்கை

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கர்நாடகா மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு நடத்தினார். டெல்லியில் இருந்து திரும்பும் வழியில் கொட்டும் மழையில் சென்று மூகாம்பிகையை தரிசனம் செய்தார். முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதாவைப் போல் மூகாம்பிகையை வழிபட்ட முதலமைச்சர் விஜய், மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு எம்.ஜி.ஆர். தங்க வாள் காணிக்கை செலுத்தியதை போல, விஜய் வெள்ளிவாளை வழங்கி வழிபாடு செய்து உள்ளார்.

கர்நாடக மாநில்ததில்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு செய்தார். முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு, டெல்லியில் தங்கி இருந்த விஜய், இன்று தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு காரில் சென்றார். கோயில் வளாகம் வந்தடைந்த முதல்வர் விஜய்யை, அர்ச்சகர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பூரண கும்ப மரியாதை
முதல்வர் விஜய்க்கு அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்த முதல்வர், கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார்.



வெள்ளி வாள் காணிக்கை

பின்னர், மூகாம்பிகை கோயிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள 2.5 அடி நீள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார். அதன் பின்னர் விஜய் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களின் சினிமா, அரசியல் வெற்றிக்காக கொல்லூர் மூகாம்பிகையை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர்களாக இருந்த நிலையில், அவர்களின் வழியில் தற்போதைய தமிழக முதல்வர் விஜய், மூகாம்பிகையை தரிசனம் செய்துள்ளார்.

Related Link
பெண்களுக்கெதிரான குற்றவாளிகள் தப்பவே முடியாது - தவெக உறுதி

பெண்களுக்கெதிரான குற்றவாளிகள் தப்பவே முடியாது - தவெக உறுதி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 59 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau