news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத்தொகை உயர்வு
tv

Also Watch

tv

Read this

விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத்தொகை உயர்வு

விம்பிள்டன்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விம்பிள்டன் டென்னிஸ்

ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்றால் ரூ.46 கோடி பரிசு :

விம்பிள்டன் டென்னிஸ்  தொடருக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை கடந்தாண்டை விட 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்றால், தலா 46 கோடி ரூபாயும், 2-வது இடம் பிடித்தால் தலா 23 கோடி ரூபாயும் பரிசு வழங்கப்படும். முதல் சுற்றோடு திரும்பினால் 1 கோடி ரூபாயும், தகுதிச் சுற்றோடு திரும்பினால் 79 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

"குயீன்ஸ் கிளப்" சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்று :

"குயீன்ஸ் கிளப்" சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்றில் இருந்து அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், கனடாவின் எம்போகோ ஜோடி விலகியது. முதல் சுற்றில் செரினா, எம்போகோ ஜோடி வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒற்றையர் பிரிவு போட்டியின்போது எம்போகோவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இருந்து விலகினார். இதனால், செரினாவின் கோப்பை கனவு தகர்ந்தது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை - பரிசுத்தொகை விவரம் :

பிஃபா கால்பந்து உலகக் கோப்பையில், வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 476 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 314 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 86 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலாகல தொடக்கம் :

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழா மெக்சிகோவில் கோலாகலமாக தொடங்கியது. வண்ணமயமான வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். உலகம் முழுவதிலும் இருந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவை டிவி, இணையதளம் வாயிலாக கோடிக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியல் :

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஒட்டுமொத்தமாக 118 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ள நிலையில், நியூசிலாந்து அணி 113 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், 103 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன.

Related Link
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் - மெக்சிகோ அணி வெற்றி

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் - மெக்சிகோ அணி வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 40 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau