news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பரிதவிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்
tv

Also Watch

tv

Read this

பரிதவிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்

தாப்பாத்தி, தூத்துக்குடி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள மக்களுக்கு 126 புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

மேலும் 300 வீடுகள் அங்கு கட்டப்படவுள்ளன. ஏற்கனவே அங்கு குடியிருந்து வரும் இலங்கை தமிழர் மக்களின் பழைய குடியிறுப்புகளை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட
திட்டமிட்டுள்ளனர். எனவே தற்போது குடியிறுக்கும் இலங்கை தமிழர் மக்கள் தங்கள் குடியிறுப்புகளை உடனடியாக காலி செய்யும்படி எட்டையாபுரம் தாசில்தார் நோட்டிஸ் வழங்கியுள்ளார்.

300 குடும்பங்கள் குடியிருக்கும் நிலையில் 80 குடும்பங்களுக்கு மட்டும் தற்காலிக குடியிறுப்புகள் அமைத்து கொடுத்துள்ளதாகவும், மற்ற குடும்பங்களுக்கு எவ்வித ஏற்பாடும் செய்யமால் குடியிறுப்புகளை காலி செய்ய சொன்னதால் அங்குள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இது குறித்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மக்கள் கூறுகையில் அரசு எங்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதை வரவேற்கிறேன். ஆனால் காலியிடத்தில் வீடுகளை கட்டமால் தற்போது குடியிருக்கும் குடியிறுப்புகளை அகற்றி விட்டு, வீடுகட்ட முயற்சி மேற்க்கொண்டுள்ளனனர்.

ஆனால் 80 குடும்பங்களுக்கு மட்டும் போதுமான அடிப்படை வசதி ஏற்படுத்தமால் மாற்று ஏற்பாடாக தகர செட்களை அமைத்து கொடுத்துள்ளனர். 80 குடும்பங்களுக்கு 2 கழிப்பிடங்கள் தான் அமைத்து கொடுத்துள்ளனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மற்ற குடும்பங்களுக்கு எவ்வித மாற்று ஏற்பாடு செய்யமால் காலி செய்ய சொல்கின்றனர்.திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவது.? போதுமான வசதிகளுடன் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு, கட்டி பணிகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Link
மயானத்தை ஆக்கிரமித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மயானத்தை ஆக்கிரமித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 39 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau