news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் குறித்த கேள்விக்கு நடிகை த்ரிஷா மவுனம்
tv

Also Watch

tv

Read this

விஜய் குறித்த கேள்விக்கு நடிகை த்ரிஷா மவுனம்

விமான நிலையம், சென்னை

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்டது குறித்து கேள்விக்கு, கண்டுகொள்ளாமல் மவுனமாக, நடிகை த்ரிஷா கடந்து சென்றார்.

விவாகரத்து வழக்கு
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த தகவல் வெளியானது முதல், விஜய்க்கும் நடிகை த்ரிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளதாக, சமூக வலை தளங்களில் பரபரப்பை கூட்டியது.

கில்லி முதல்...
த்ரிஷா, விஜய் உடன் இணைந்து நடித்த முதல் படம் கில்லி. இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி, பிளாக்பஸ்டர் திரைப்படமானது. இயக்குனர் தரணி இயக்கிய இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் அப்போது மிகப்பெரிய ஜோடியாக பேசப்பட்டனர். விஜய் திரை வாழ்க்கையில் கில்லி மிகச் சிறந்த படங்களில் ஒன்று. கில்லி மூலம் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய ஹிட்டாக திகழ்ந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

திருப்பாச்சி, ஆதி, குருவி...
கில்லி படத்தில் வெற்றிக் கூட்டணியாக தொடங்கிய பிறகு, த்ரிஷாவும் விஜய்யும் 2005ல் திருப்பாச்சி, 2006ல் ஆதி, 2008ல் குருவி உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடி சேர்ந்தனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023ல் லியோ படத்தில் மீண்டும் இணைந்தனர், அந்த படத்தில் கணவன், மனைவியாக நடித்தனர்.

2024ல், இந்த ஜோடி மீண்டும் தி கோட் The Greatest of All Time படத்தில் இணைந்தனர், இதில், த்ரிஷா ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில், விஜய் உடன் நடனம் ஆடினார்.

ஆக, த்ரிஷா மற்றும் விஜய்யின் கெமிஸ்ட்ரி திரையை தாண்டி பயணித்தபோது, ​​விஜய் குடும்பத்தினர், அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால், இவர்கள் இருவரும் நீண்டகாலமாக, சினிமாவில் ஜோடி சேராமல் இருந்தனர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு...
சுமாராக 15 ஆண்டுக்குப் பிறகு லியோ படத்திற்காக மீண்டும் இணைந்த த்ரிஷாவும் விஜய்யும், படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு, நார்வேயின் ஒஸ்லோவிற்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர். இதனால் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக வைரல் ஆனது. கடந்த மார்ச் 2022ல், நியூயார்க்கில் தனியாக விடுமுறை செல்வதாக கூறி, புகைப்படங்களை பதிவேற்றியிஇருந்தார்.

அந்த போட்டோவில் விஜய்யின் காலணிகள் தென்பட்டதால், சர்ச்சைகளுக்கு உள்ளானார்கள். விஜய் பிறந்தநாளில் த்ரிஷா தனது சமூக வலை தள பக்கத்தில், விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து அதில் சில எமோஜிகள் பதிவிட்டு இருந்தது, பேசு பொருளானது. மற்றொரு பதிவில், விஜய் உடன் ஒரு கண்ணாடி செல்ஃபியைப் த்ரிஷா பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்தில், த்ரிஷா நீல நிற உடையிலும், விஜய் கருப்பு நிற உடையிலும் காணப்பட்டனர்.

இந்த போட்டோவும் வைரல் ஆனது. கடந்த 2024ஆம் ஆண்டு த்ரிஷா மற்றும் விஜய் கோவாவிற்கு மேற்கொண்ட பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் கலந்து கொள்ள இருவரும் பயணம் செய்ததும் வைரல் ஆனது.

இன்று த்ரிஷா மவுனம்
இந்த நிலையில், இன்று மார்ச் 13ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில், நடிகை த்ரிஷாவிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் உடன் சேர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்டது குறித்த கேள்விக்கு, கண்டுகொள்ளாமல், நடிகை த்ரிஷா, மவுனமாக கடந்து சென்று உள்ளார்.


Related Link
படு வைரல் ஆன பார்த்திபன் வீடியோ

படு வைரல் ஆன பார்த்திபன் வீடியோ

         




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 30 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved