news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி
tv

Also Watch

tv

Read this

ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி

தலை வணங்கிய பயிற்சியாளர், வைரல்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில்  வெற்றி

பிபா உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பிரேசில் அணி தகுதி பெற்றது. நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணியை 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முன்னேற்றம் அடைந்தது.
தோல்விக்கு பிறகும், தங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்த ஜப்பான் அணியின் பயிற்சியாளரின் நடவடிக்கை பேசு பொருளாகி உள்ளது.

ஜப்பான் vs பிரேசில்
பிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் கைஷு சனோ (Kaishu Sano) ஒரு கோல் அடித்த நிலையில், ஜப்பான் 1க்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகித்தது.

வெற்றி வாகை சூடிய பிரேசில்
தொடர்ந்து, இரண்டாவது பாதியின் 56ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் Casemiro ஒரு கோல் அடித்த நிலையில், கூடுதல் நேரத்தின் 6ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் gabriel martinelli மற்றொரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது.

தலை வணங்கிய பயிற்சியாளர்
2026 பிஃபா உலகக் கோப்பை தொடரில், தோல்விக்கு பிறகும் தங்களது அணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தலைவணங்கி ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹாஜிம் மோரியாசு நன்றி தெரிவித்தார். அவரது பண்பு, சமூக வலை தளங்களில் வைரலாகி, பேசு பொருளாகி உள்ளது.

ஆட்டத்தின் இறுதி விசில் ஒலித்த உடன் தனது அணியினருடன் ஆடுகளத்தின் மையத்துக்கு வந்து, தங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு ஜப்பான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹாஜிம் மோரியாசு, தலை வணங்கி நன்றி தெரிவித்தார். ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தின்படி, தலை வணங்கி நன்றி சொல்லும் Ojigi வழக்கத்தை பயிற்சியாளர் கடைபிடித்தார். இந்நிகழ்வு மிகவும் உணர்வுப் பூர்வமானதாக அமைந்தது. பயிற்சியாளரின் செயல், போட்டியில் தோற்றாலும், சமூக வலைதள பயனர்களின் மனதை வென்று உள்ளது.

Related Link
பிஃபா உலகக் கோப்பை ஜெர்மனியை வீழ்த்திய பராகுவே அணி

பிஃபா உலகக் கோப்பை ஜெர்மனியை வீழ்த்திய பராகுவே அணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இடையூறு இன்றி தவெக அரசு இயங்கும்" - திருமாவளவன்

5
18 mins agoshare
"இடையூறு இன்றி தவெக அரசு இயங்கும்" - திருமாவளவன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau