news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிஃபா உலகக் கோப்பை ஜெர்மனியை வீழ்த்திய பராகுவே அணி
tv

Also Watch

பிஃபா உலகக் கோப்பை ஜெர்மனியை வீழ்த்திய பராகுவே அணி

பலம் வாய்ந்த அணி அதிர்ச்சி

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெர்மனியை வீழ்த்திய பராகுவே அணி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பராகுவே அணி வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் 4க்கு 3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

19ஆவது நாள் போட்டிகளில்...
ஃபிபா உலகக் கோப்பை 2026ல், 19ஆவது போட்டி நாளில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் ஆட்டங்கள் ரசிகர்களுக்கு விருந்தளித்தன. ஜெர்மனி அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் பராகுவேயிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியுடன் வெளியேற்றத்தை சந்தித்தது.

120 நிமிடங்களின் முடிவில்...
ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகளுக்கு இடையேயான போட்டி, 120 நிமிடங்களின் முடிவில் ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலையில் முடிந்தது. இதனால், பெனால்டி ஷூட் அவுட்டிற்கு போட்டி சென்றது. இது உண்மையில் கத்தி முனை தான் என்ற நிலையில், எவ்வளவு பெரிய அணியும் காலியாகும் சூழலில், இப்படித்தான் ஆனது ஜெர்மனியின் கதை. முதல் பாதியின் இறுதியில், ஜூலியோ என்சிசோவின் முயற்சியால் கிடைத்த கார்னரில், மாதியாஸ் கலார்சா அளித்த துல்லியமான நகர்வை, ஹெட்டராக மாற்றிய என்சிசோ, 42ஆவது நிமிடத்தில் பராகுவேவை முன்னிலை பெறச் செய்தார்.

வெற்றிக்கான போராட்டம்
இரண்டாம் பாதியில் தீவிரமாக களமிறங்கிய ஜெர்மனி அணி, 54ஆவது நிமிடத்தில் ஃப்ளோரியன் விர்ட்ஸ் அளித்த கிராஸை, கை ஹாவெர்ட்ஸ் அழகான ஹெட்டர் மூலம் கோலாக்கி சமநிலையை ஏற்படுத்தினார்.
அதன்பிறகு, இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடின. கூடுதல் நேரத்தின் இறுதியில் ஜோனதன் தாஹ் அடித்த கோல், விஏஆர் பரிசோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில்லின் பாதையை ஆண்டன் ஸ்டாக் மறித்ததாக நடுவர் தீர்ப்பளித்தார்.

கில்... கில் தான்...
பெனால்டி ஷூட் அவுட்டில் பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் அபாரமாக செயல்பட்டார். கை ஹாவெர்ட்ஸ் மற்றும் நிக் வோல்டமேடே எடுத்த பெனால்டிகளை அவர் தடுத்தார். தொடர்ந்து, ஜோனதன் தாஹ் தனது முயற்சியை வானத்திற்கு பறக்கவிட்டார். இறுதியில் ஜோசே கனாலே தனது பெனால்டியை வெற்றிகரமாக மாற்றி, பராகுவேவுக்கு 4க்கு மூன்று என்ற ஷூட் அவுட் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியுடன் பராகுவே, ரவுண்ட் ஆஃப் 16ல் பிரான்ஸ் - ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான போட்டியில், வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது. 

Related Link
18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved