Also Watch
Read this
By: Manigandan Raja

மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.6.75 கோடி என கணிப்பு :
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் FIFA கால்பந்து உலகக் கோப்பையின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 6 கோடியே 75 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை மொத்தம் 6.175 கிலோ எடை கொண்டது என்றும், 18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இது 4.93 கிலோ தங்கத்தை உள்ளடக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே அணியை 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது :
fifa உலகக்கோப்பை கால்பந்து குரூப் சுற்றில் நார்வே அணியை 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நார்வே-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பலே முதல் பாதியில் அடித்த பிரமிக்க வைக்கும் ஹாட்ரிக் கோல்களால், நார்வே அணி தோல்வியை சந்தித்தது.
ஜெர்மனியை வீழ்த்திய ஈகுவடார் அணி :

FIFA உலக கோப்பையை 4 முறை வென்ற ஜெர்மனியை வீழ்த்திய ஈகுவடாரின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக அந்நாட்டு அதிபர் நோபோவா, ஒரு நாள் தேசிய விடுமுறை அறிவித்தார். ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திநாக்-அவுட் சுற்றுக்கு ஈகுவடார் முன்னேறியது. இதன் மூலம், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈக்வடார் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.