சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆசியாவில் புதிய கொரோனா அலை பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஹாங்காங் சுகாதார பாதுகாப்பு மையத்தின் தொற்றுநோய் பிரிவு தலைவர் Albert Au, கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் ஓராண்டுக்கு பிறகு முதல்முறையாக மே மாதம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், கடந்த மே 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு முந்தைய வாரத்தை விட 28 சதவீதம் அதிகரித்து, 14 ஆயிரத்து 200 ஆக இருந்ததாகவும், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.