news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 6 அமைச்சர் பதவிக்கு ஆசை, எடப்பாடி பழனிசாமி கண்டனம்
tv

Also Watch

tv

Read this

6 அமைச்சர் பதவிக்கு ஆசை, எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தூய்மையான ஆட்சி இது தானா விஜய்?

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொறடா உத்தரவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்கு அளித்திருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, 6 அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் பதவி தருவதாக தவெக ஆசை காட்டி ஆதரவாக வாக்கு அளிக்க வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். கட்சியில் நிகழும் கருத்து வேறுபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒருசாரார் வீட்டுக்கு செல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தூய்மையான ஆட்சி நடத்துவோம் என சொல்லி விட்டு இப்படியெல்லாம் செய்வதா? என்றும் கூறி உள்ளார்.

தவெகவுக்கு ஆதரவு, புகார்
சட்​டப்​பேரவை வளாகத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் இபிஎஸ் கூறிய​தாவது:
தவெக நம்​பிக்கை கோரும் தீர்​மானத்தில், அதி​முக எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்​களிக்க வேண்​டும் என்று அவை​யில் நான் பேசினேன். ஆனால், கொறடா உத்​தரவை மீறி தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த அதி​முக எம்​எல்​ஏக்​கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்​க உள்​ளோம். அதி​முக​வுக்கு சில எம்​எல்​ஏக்​கள் துரோகம் செய்​து உள்​ளனர். கொறடா உத்​தரவை மீறி, சட்​டத்​துக்​குப் புறம்​பாக தவெக அரசுக்கு வாக்​களித்​து உள்​ளனர். 6 அமைச்​சர்​கள், 10 வாரி​யத் தலை​வர்​கள் பதவி கொடுப்​ப​தாக தவெக பேரம் பேசி​ உள்​ளது. அதனால்​தான் அவர்​கள் ஆதர​வாக வாக்​களித்​து உள்​ளனர்.

எந்த விதத்​தில் நியா​யம்? இது​தான் தூய்​மை​யா?
அதி​முக​வுக்கு விசு​வாசம் இல்​லாமல், சில முன்னாள் அமைச்சர்கள் துரோகம் விளைவித்து உள்ளனர். தூய்​மை​யான ஆட்சி நடத்​து​வேன் என்று சொல்​லும் முதலமைச்சர் விஜய், ஒரு கட்​சி​யில் கருத்து வேறு​பாடு நில​வும்​போது ஒரு தரப்​பினரைச் சந்​திப்​பது எந்த விதத்​தில் நியா​யம்? இது​தான் தூய்​மை​யா? எல்லா இயக்​கங்​களுக்​கும் சோதனை வரும், பிரிவு வரும். ஆனால் எந்த தலை​வரும் பிரிந்​தவர்​களின் இல்​லங்​களுக்​குச் சென்​றது இல்​லை. ஆரம்​பத்​திலேயே தவறான பாதைக்​குச் செல்​கிறார் முதல்வர் விஜய். இது தவறான முன்​னு​தா​ரணம்.

திமுக உடன் பேசவில்லை
108 இடங்​களில் மட்​டும்​தான் தவெக வென்​றது. விஜய் ஒரு தொகு​தியை ராஜி​னாமா செய்​த​தால் 107 ஆனது. ஒரு எம்​எல்ஏ வாக்​களிக்க முடி​யாத​தால் எண்​ணிக்கை 106 ஆனது. தேர்​தல் பிர​சா​ரத்​தில் நான் திமுக​வைத்​தான் தாக்​கிப் பேசினேன். அதி​முக உரு​வானதே திமுகவை எதிர்த்​துத் ​தான். தவெக அமைச்​சர​வை​யில் இடம்​பெற வேண்​டுமென்ற ஆசை​யில் சிலர், தவறான தகவலைச் கூறுகின்​றனர். நூற்​றுக்கு நூறு சதவீதம் திமுக உடன் எந்​தப் பேச்​சு​வார்த்​தை​யும் நடத்​த​வில்​லை. கட்​சி​யின் அதி​காரம் என்​னிடம்தான் உள்​ளது. கொற​டாவை நியமிக்​கும் அதி​காரம் பொதுச்​செய​லா​ள​ருக்​குத் ​தான் உள்​ளது. சட்​டப் பேர​வை​யில்​ வி​தி, மரபு பின்​பற்​றப்​பட​வில்​லை.
இவ்​வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Link
''புஷ்பா பட பாணியில் புதிய ஆட்சி

''புஷ்பா பட பாணியில் புதிய ஆட்சி" - உதயநிதி விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6 அமைச்சர் பதவிக்கு ஆசை, எடப்பாடி பழனிசாமி கண்டனம்

4
1 hr 3 mins agoshare
எடப்பாடி பழனிசாமி கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved