news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்
tv

Also Watch

குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்

முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் சட்டப்பேரவையில், முதலமைச்சர் விஜய் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் போன்ற முத்தான அறிவிப்புகளை வெளியிட்டு குடும்பத்தலைவிகள், பெண்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளார்.

தமிழக சட்டசபையில்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாள் விடுமுறைக்கு பின், கூட்டத்தொடர் தொடங்கியதும், முதலமைச்சர் விஜய், 110 விதியின் கீழ் பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகளை மகிழ்விக்கும் வகையில் முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். போர்ச்சூழல் காரணமாக, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், பொங்கல் பண்டிகை முதல், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர்
இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கும் வகையில், இதற்கான தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படும் என்றும், சுமார் 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

வெற்றிப் பயணம்
அடுத்ததாக, மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டமான 'வெற்றிப் பயணம்' திட்டம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில் மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிலோமீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், இனி மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

ரூ.6,000 கோடி செலவாகும்
கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளப் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெற்றிப் பயணம் திட்டம் இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று கூறிய முதலமைச்சர், இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும் என்றார். இத்திட்டத்தில், திருநர், திருநங்கைகளும் பயணிக்கலாம் என்ற முதலமைச்சர் இத்திட்டத்திற்காக அரசிற்கு 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் வரவேற்பு
இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் சிறு வியாபாரம் செய்யும் பெண்கள், தங்களுக்குப் போக்குவரத்துச் செலவு மிச்சமாகும் என்றும், அந்தத் தொகையைச் சேமிப்பதன் மூலம் தங்களின் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

மொத்தத்தில், வெற்றிப் பயணம் திட்டம் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத்தரம் மேலும் உயரவும், அவர்கள் 'சிங்கப் பெண்களாக' சாதனைகள் படைக்கவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Link
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கைவிடப்படும் பரந்தூர் விமான நிலையம், நீண்ட நெடும் போராட்டத்துக்கு தீர்வு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved