சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 283 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.