Also Watch
Read this

சென்னையில், இன்று ஜூன் 22ஆம் தேதி ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,600க்கும், ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும், எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூன் 17
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 18
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. காலையில் உயர்ந்த ஆபரண தங்கம் விலை, பிற்பகலில் குறைந்தது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை ஆனது.

ஜூன் 19
ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 20
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது.தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 22
ஒரு கிராம் ரூ.13,600க்கும், ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும், எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 17 - ரூ.1,12,240
ஜூன் 18 - ரூ.1,11,600
ஜூன் 19 - ரூ.1,08,560
ஜூன் 20 - ரூ.1,08,800
ஜூன் 21 - ரூ.1,08,800
ஜூன் 22 - ரூ.1,08,800 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved