news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சவுதி அரேபியா உடன் போட்டி, வெற்றிவாகை சூடிய ஸ்பெயின்
tv

Also Watch

tv

Read this

சவுதி அரேபியா உடன் போட்டி, வெற்றிவாகை சூடிய ஸ்பெயின்

முதல் வெற்றி பதிவு

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சவுதி அரேபியா உடன் போட்டி, வெற்றிவாகை சூடிய ஸ்பெயின்

உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஸ்பெயின் அணி. சவுதி ஆரேபியா அணியை 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது.

சவுதி அரேபியா vs ஸ்பெயின்
பிஃபா உலகக் கோப்பை-2026 தொடரின், குரூப் எச் பிரிவில், அமெரிக்காவின் அட்லண்டா நகரில் உள்ள மெர்சிடிஸ் - பென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சவுதி அரேபியா, ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்றது.

விமர்சனத்திற்கு உள்ளான முதல் போட்டி
முதல் போட்டியில், குட்டி நாடான கேப் வெர்டே அணி உடன் கோல் ஏதுமின்றி ’டிரா’ செய்திருந்த ஸ்பெயின் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி, ஆரம்பம் முதலே போட்டியை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

லாமின் யமாலின் முதல் கோல், வரலாறு
விறுவிறுப்பான ஆட்டத்தில், போட்டி தொடங்கிய 11ஆவது நிமிடத்திலேயே இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால் தனது முதல் உலகக் கோப்பை கோலை பதிவு செய்து, ரசிகர்களை அசத்தினார். மைக்கேல் ஒயர்சபால் வழங்கிய துல்லியமான நகர்வை, கோலாக மாற்றிய யமால், உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்த இளம் வீரர்களின் வரலாற்றுப் பட்டியலிலும் இடம் பிடித்தார்.

கனவு நனவான தருணம்
2022 உலகக் கோப்பையை வகுப்பறையில் இருந்து பார்த்ததாக கூறிய இளம் வீரர் யமால், தற்போது உலகக் கோப்பை களத்தில், கோல் அடித்திருப்பது ’கனவு நனவான தருணம்’ என்று, நெகிழ்ச்சி உடன் கூறினார்.

இரட்டை கோல் அபாரம்
யமாலின் கோலுக்குப் பின்னர், ஸ்பெயின் அணி மேலும் வேகம் எடுத்தது. 21 மற்றும் 23ஆவது நிமிடங்களில் தொடர்ந்து 2 கோல்களை அடித்த மைக்கேல் ஒயர்சபால், போட்டியை ஸ்பெயின் அணியின் பக்கம் முழுமையாக திருப்பினார். முதல் பாதியிலேயே, ஹாட்ரிக் வாய்ப்பும் கிடைத்த நிலையில், அவரது அதிரடி ஷாட், குறுக்கு கம்பியில் பட்டு வெளியேறியது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், 49ஆவது நிமிடத்தில் 4ஆவது கோலை பெற்றது.

ரத்தானது கோல்
கார்னர் வாய்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தில் சவுதி அரேபிய வீரர் ஹசன் அல் தம்பக்தி தவறுதலாக பந்தை தனது கோல் வலையிலேயே தள்ளியதால், ஸ்பெயின் 4க்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது. போட்டியின் இறுதி நேரத்தில், ஃபெரான் டோரஸ் ஒரு கோல் அடித்தாலும், பரிசோதனையில் ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டதால் அந்த கோல் ரத்து ஆனது.

முதல் இடத்திற்கு முன்னேறியது ஸ்பெயின்
இந்த அபார வெற்றியினால், ஸ்பெயின் அணி குரூப் எச் பிரிவில் முக்கியமான 3 புள்ளிகளை கைப்பற்றி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த ஸ்பெயின் அணி, இந்த முறை தனது உண்மையான அசுர பலத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் தாங்களும் இருப்பதை நிரூபித்து உள்ளது. லாமின் யமால் மற்றும் மைக்கேல் ஒயர்சபாலின் அதிரடி ஆட்டம் ஸ்பெயின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை, முதல் வெற்றியை பதிவு செய்த பிரேசில்

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை, முதல் வெற்றியை பதிவு செய்த பிரேசில்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 22062026

3
1 hr 21 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 22062026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved