news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
tv

Also Watch

tv

Read this

முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

பிரம்மாண்டமான ஏற்பாடுகள்

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சொந்த தொகுதியான பெரம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். ரிப்பன் வெட்டி திறந்ததும் எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார்.

இ-சேவை மையம்
பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையத்தை திறந்து வைத்து, முதல்வர் விஜய் பணிகளை பார்வையிட்டார். பெரம்பூர் தொகுதி மக்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சேவை தளத்தையும் தொடங்கி வைத்தார்.

பிரம்மாண்டமான ஏற்பாடு
முதல்முறையாக, சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றியை வாரிக்கொடுத்த பெரம்பூர் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, முதல்வர் விஜய் திறந்து வைத்தார். சர்மா நகர் 1ஆவது பிரதான சாலையில் அமைந்துள்ள அலுவலக திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு இருந்தது.

பெரம்பூர் மக்களுக்காக பிரத்யேக செயலி
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியை முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான விஜய் அறிமுகம் செய்து வைத்தார். பெரம்பூர் தொகுதி மக்களின் குரலை நேரடியாக மக்களாட்சியின் நிர்வாகத்துடன் இணைக்கும் முயற்சியாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மலர் தூவி மரியாதை
பெரம்பூரில் தனது எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த பின்பு, கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.

பெரம்பூருக்கு முதல்வர் வருகை - பாதுகாப்பு
முதலமைச்சர் விஜய் வருகையை ஒட்டி பெரம்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்மா நகர் ஒன்றாவது தெரு முதல் நியாய விலைக் கடை அமைந்துள்ள 10ஆவது தெரு வரை, வீடுகள் கடைகள் முன்பு இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Related Link
விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்தேன் என விஜயபாஸ்கர் விளக்கம்

விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்தேன் என விஜயபாஸ்கர் விளக்கம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரேசன் பொருட்கள் விநியோகித்த முதலமைச்சர் விஜய்

5
19 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau