Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டதால் சீரான போக்குவரத்து :
அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹோர்மூஸ் நீரினை திறக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து சீரான நிலையில், 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக குறைத்துள்ளது.
சவுதி அரேபியாவின் முக்கிய தளமான ராஸ் தனுரா ((Ras Tanura)) துறைமுகத்தில் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்துள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராகக் குறைந்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையை கடந்த ஜப்பான் எண்ணெய் கப்பல்கள் :
அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின் ஹோர்மூஸ் நீரினை திறக்கப்பட்டதால், வளைகுடா பகுதியில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜப்பானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக ஹோர்மூஸ் நீரினையை கடந்து சென்றன. சுமார் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஜப்பானை நோக்கி செல்வதால் ஜப்பானில் விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு குறையும் என நம்பப்படுகிறது.
ஈரானுக்கு சில சலுகைகள் வழங்கியுள்ளோம்-டிரம்ப் :

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈரான் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அதே வேளையில் நிபந்தனைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார்.
அணுசக்தி தொடர்பாக சில சலுகைகள் வழங்கியுள்ளதாகவும், ஈரான் அதை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளியேற்றவுள்ளதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், அதற்கு ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது.