வெளியேற்றப்பட்ட பெண் : அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ஃபோனில் ஹெட்ஃபோன் பயன்படுத்த மறுத்து சத்தமாக வீடியோ பார்த்த பெண் வெளியேற்றப்பட்டார். மியாமியில் இருந்து டம்பாவுக்குச் சென்ற விமானத்தில் நடந்த சம்பவத்தை சகபயணி ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்ணிடம், விமான நிறுவன ஊழியர்கள் ஹெட்ஃபோன்கள் பயன்படுத்த அறிவுறுத்தியும் அவர் அதனை ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்ததோடு ஆபாச வார்த்தைகள் பேசியது பதிவாகி உள்ளது. Related Link அடர்ந்த புகை மூட்டத்துடன் பற்றி எரிந்த பேருந்து