இந்தியா

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசின் நடவடிக்கையால், மாநில அரசின் நிதி திரட்டும் முன்முயற்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதாக புள்ளி விவரங்களோடு கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கையை ஒருமித்த கருத்துடைய முற்போக்கான  மாநில அரசுகள் எதிர்க்கவேண்டும் என மு.க. ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்தார்.  

கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை பாராட்டுவதாகவும், தான் முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

00 Comments

Leave a comment