தமிழ்நாடு

திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. நாலாபுறங்களிலும் விழுந்து தீப்பிடித்தது..| Theni fire

மின்சார உயர் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்மாற்றி . ஆண்டிபட்டி அருகே ஆலந்தளிர் கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு மின்வினியோகம் பாதிக்கும் என மின்துறை அறிவிப்பு தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மலைக்கிராமம் ஆழந்தளிர்

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வசித்து வருகின்றனர் இவர்களது வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பயன்படும் வகையில் 100 kva திறன் கொண்ட மின்மாற்றி மயிலாடும்பாறை மின்வாரிய அலுவலகத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆலந்தளிர் நரியூத்து சாலையோரம் அமைக்கப்பட்டது

தற்போது மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதாலும் , கடும்வெயில் சீதோஸ்னம் நிலவுவதாலும் திடீரென இந்த மின்மாற்றி வெடித்தது இதையடுத்து மின்மாற்றியில் உள்ள ஆயில் மற்றும் ஆசிட்கள் சிதறி நாலாபுறங்களிலும் விழுந்து தீப்பிடித்தது இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மயிலாடும்பாறை மின்வாரிய அலுவலகத்திற்கும் கடமலைக்குண்டு துணை மின்நிலையத்திற்கும் தகவல் அளித்ததையடுத்து இப்பகுதியில் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டது

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட மயிலாடும்பாறை இளநிலை மின்பொறியாளர் மின்மாற்றி வெடித்துள்ளதால் அதை சரிசெய்ய இரண்டு நாட்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளார் அதுவரை ஆலந்தளிர் கிராமத்திற்கும் இப்பகுதி விவசாய மின்மோட்டார்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என்பதால் ஆலந்தளிர் பொதுமக்களும் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

00 Comments

Leave a comment