இந்தியா

உலகின் பிரம்மாண்ட ஹம்மர் கார்.!! துபாய் ஷேக்கின் வீடியோ வைரல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும் உறுப்பினரான ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யானின் பிரமாண்ட ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த ஹம்மர் எச்1 கார் 14 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும், 5.8 மீட்டர் உயரமும் கொண்டது. கிட்டத்தட்ட இரண்டு மாடி கட்டிடத்தை போல உள்ள இந்த கார், சாதாரண காரின் அளவை விட மூன்று மடங்கு பெரியத என்று கூறப்படுகிறது. மணிக்கு 32 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த பிரம்மாண்ட ஹம்மர் X3 ஷார்ஜாவில் உள்ள ஆஃப் ரோடு வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கார் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

00 Comments

Leave a comment