தமிழ்நாடு

பெரியாரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளாசல்

பெரியார் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை - பாஜக ஆட்சிக்கு வந்தால்
பெரியார் சிலை அகற்றப்படுமென அண்ணாமலை தெரிவித்தற்கு பதிலளித்த அமைச்சர்
பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிதைகள் திரைப்பட மற்றும் நாடக வசனங்கள்
ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது, இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து
கொண்டு அவர்கள் திறமையை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்
கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி
சிறப்புரை ஆற்றினார்.

இன்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர்.

பெரியார் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை - பாஜக ஆட்சிக்கு வந்தால்
பெரியார் சிலை அகற்றப்படுமென அண்ணாமலை தெரிவித்தற்கு பதிலளித்த அமைச்சர்
பொன்முடி

பெரியார் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை அண்ணாமலை ஐ பி எஸ்
ஆக இருந்ததற்கு காரணம் பெரியார் தான் அரசியலுக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள் கூட
பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளனர்

வட இந்தியாவில் உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்று கொண்டுள்ளனர்.
மனப்பூர்வமாக அண்ணாமலை இதனை பேசி இருக்க மாட்டார், செய்தியில் வர வேண்டும்
தான் இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசியிருப்பார்
என்றும் அதனை அவர் மாற்றி கொள்ள வேண்டும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பெரியாரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை  உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளாசல்

00 Comments

Leave a comment