தமிழ்நாடு

பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலி; பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

கேரளம் மாநிலம் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதி சாலையில், வாழையூர் பகுதியை சேர்ந்த முகமது நிகால் மற்றும் அம்ஜித் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக காய்கறிகளை ஏற்றி சென்ற லோட் ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து வேகமாக மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட முகமது நிகால் மற்றும் அம்ஜித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து  குறித்த  பதபதைக்க வைக்கும்  சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment