தமிழ்நாடு

இளம்பெண்ணை கொலை செய்த ஆண் நண்பர் கைது.!

இளம்பெண்ணை கொலை செய்த ஆண் நண்பர் கைது.!

சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வைத்து கொலை செய்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தீபாவை காணவில்லை என அவரது தாய் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே, குடியாத்தம் ரயில் நிலையம் அருகேயுள்ள மலையடிவாரத்தில் இருந்து அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சென்னையில் செல்போன் கடையில் பணியாற்றிய தீபாவுக்கும், ஹேம்ராஜுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜ், தீபாவை அங்கு வரவழைத்து, அவர் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

00 Comments

Leave a comment