தமிழ்நாடு

சென்னையிலிருந்து துபாய், ஷார்ஜா, குவைத் விமானங்கள் ரத்து

சென்னையிலிருந்து துபாய், ஷார்ஜா, குவைத் விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் இருந்து துபாய், ஷார்ஜா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு நாடுகளில் செவ்வாய்க்கிழமை முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத்து செல்லும் விமானங்களும், அங்கிருந்து சென்னை வரவேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 

00 Comments

Leave a comment