சென்னை

கனமழை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு படகில் சென்று உணவு வழங்கிய காவல் ஆணையர்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் படகில் சென்று உணவு வழங்கினார்.

திருவல்லிக்கேணியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் பாரதி சாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் சென்று வாழைப்பழம், பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.

கனமழை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு  படகில் சென்று உணவு வழங்கிய காவல் ஆணையர்

00 Comments

Leave a comment