தமிழ்நாடு

வெடி மருந்துகளுடன் சென்ற கண்டெய்னர் லாரியில் பழுது..துப்பாக்கி ஏந்திய ஆர்.பி.எஃப். போலீசார் பாதுகாப்பு | Chennai

சென்னை எண்ணூர் விரைவுச் சாலையில் வெடி மருந்துகளுடன் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகம் நோக்கி வெடி மருந்துகளுடன் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திருவொற்றியூர் டோல்கேட் சிக்னல் அருகே திடீரென பழுதாகி சாலையில் நின்றது. மொத்தம் 19 கண்டெய்னர் லாரிகள் சென்ற நிலையில், அதில் ஒரு லாரியில் மட்டும் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தார். துப்பாக்கி ஏந்திய ஆர்.பி.எஃப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அருகில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்ட பின் லாரி புறப்பட்டுச் சென்றது. இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

00 Comments

Leave a comment